ஆதரவு திரட்டல் பகுதி
ஆதரவு திரட்டல் பகுதி
கழகம் ஆற்றிவரும் பணிகளில் தூணாகளங்குவது கழகத்தின் ஆதரவு திரட்டல் பகுதி.அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவினை திரட்டுவதன் மூலம் மறுவாழ்வு பணிகளில் சிறப்புடன் செயல்பட இப்பகுதி உதவுகிறது.

ஊட்டபகுதி
ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக கணனி பகுதி சேவை
அகதி முகாம் மாணவர்களிடையே கணனி அறிவை மேம்படுத்துவதற்கு எமது ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சா.செ. சந்திரகாசன் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளிகுப்பம் முகாமில் அதிநவீன கணனி பொருட்களுடன் கணனி வகுப்பு இனிதே நடத்தப்பட்டது.
இந்தக் கணனி வகுப்பில் முகாமில் உள்ள முப்பத்தி இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணணி வகுப்பினை கணணி பகுதியை சேர்ந்த திரு.தாஸ் மற்றும் திரு.மதன் அவர்கள் பயிற்றுனர்களாக செயல்பட்டார்கள்.

மருத்துவ பிரிவு
தமிழ் நாட்டில் வாழும் தமிழ் அகதிமக்கள் தங்கள் நல நிலையினைமேம்படுத்தி தக்க வைத்து ஆரோக்கியமான சமுகமாக நாடு திரும்பிட உதவுதல்.
இதை நோக்கமாக கொண்டு பின்வரும் நடவடிக்கைகளை மேறகொள்ளப்படுகிறது.
- தாய் சேய் நலம்
- முதல் உதவி சேவை
- சுற்றுch சூழல் சுகாதாரம்
- நோயாளர் தொடர் கவனிப்பு
- மருத்துவ முகாம்கள்
- நோயறியும் பரிசோதனைகள்

மகளிரைத் தகமைப்படுத்தும் பகுதி உங்களை வரவேற்கிறது.
தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் நலிவடைந்த பிரிவினர்களாக பெண்களே காணப்படுகின்றார்கள். சொந்த நாட்டில் வாழ முடியாமல் புலம் பெயர்ந்த இந்த மக்கள் இங்கு வாழும் காலங்களில் இங்கு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி ஈழ ஏதிலியர் மறு வாழ்வு கழகத்தின் துணையோடு தகைமையை அடைந்து நாட்டை கட்டியெழுப்ப கூடியவர்களாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதை மனதில் கொண்டு எங்கள் பணி தொடர்கின்றது.

தமிழ் இணையம்
தமிழ் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இணையத்தை பயன்படுத்தி தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?
தமிழில் வலைப்பதிவு தொடங்கி தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் தற்ப்போது இல்லை. எல்லாவற்றிக்கும் இணையம் இன்று வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தற்போது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தி வரும் யுனிகோட் வகை எழுத்துருக்களை எளிதில் பயன்படுத்துவதற்கு கூகிள் இணையத்தில் வசதிகள் உள்ளன. இங்கே குறிப்பிடப்படும் இணைய முகவரிக்கு சென்றால் http://www.google.com/transliterate/indic/Tamil நீங்கள் தட்டச்சு செய்வதற்கான இடம் இருக்கும்.

அதில் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய விடயத்தை ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தட்டச்சு செய்தால் அது தானாகவே ஆங்கில எழுத்துருக்களை தமிழ் வார்த்தைகளாக மாற்றிவிடும். உதாரணமாக ‘அம்மா’ என்று தட்டச்சு செய்ய வேண்டுமானால் ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அது தானாகவே தமிழில் அம்மா என்று மாற்றிவிடும்.
வாக்கிய தொடர்களை எழுதும்போது இடையில் ஆங்கில வார்த்தைகள் வேண்டுமானால் control + G பட்டன்களை அழுத்தியபின் தட்டச்சு செய்தால் அங்கில வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருக்கும். மீண்டும் தமிழில் தட்டச்சு செய்ய control + G பட்டன்களை அழுத்தினால் அதன் பிறகு தட்டச்சு செய்யும் வார்த்தைகள் தமிழில் வெளிப்படும்.
தேவையான செய்திகளை தட்டச்சு செய்து முடித்தவுடன் அவற்றை வழமையான முறையில் copy செய்து தேவையான இடத்தில paste செய்து கொள்ளலாம்.
மாந்தநேயப் பணி தொடர வாழ்த்துகின்றோம்
இன்று ஈழத் தந்தை செல்வா அவர்களின் புதல்வரும், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் மற்றும் பொருளாளருமான திரு.சா.செ.சந்திரகாசன் அவர்களின் 67 வது பிறந்த நாள் ஆகும். புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் அகதி மக்களுக்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய பணிகளை ஆற்றி வருவதுடன், மக்கள் பணியே தனது வாழ்க்கை என்று எண்ணி சேவையாற்றி வருகிறார். தமிழர் வரலாற்றின் முக்கியமான காலப் பகுதியான இந்த நேரத்தில் அவரின் பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரின் மாந்தநேயப் பணி புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழ் உலகுக்கும் என்றும் தொடர வேண்டும் என்று வேண்டி இந்த பொன்னாளில் வாழ்த்துகின்றோம்.
குடும்பத்தினர்,
ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்.
