இணையத்தை பயன்படுத்தி தமிழ் தட்டச்சு செய்வது எப்படி?
தமிழில் வலைப்பதிவு தொடங்கி தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் மின்னஞ்சல் அனுப்புவதற்கும் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் தற்ப்போது இல்லை. எல்லாவற்றிக்கும் இணையம் இன்று வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தற்போது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தி வரும் யுனிகோட் வகை எழுத்துருக்களை எளிதில் பயன்படுத்துவதற்கு கூகிள் இணையத்தில் வசதிகள் உள்ளன. இங்கே குறிப்பிடப்படும் இணைய முகவரிக்கு சென்றால் http://www.google.com/transliterate/indic/Tamil நீங்கள் தட்டச்சு செய்வதற்கான இடம் இருக்கும்.

அதில் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டிய விடயத்தை ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தட்டச்சு செய்தால் அது தானாகவே ஆங்கில எழுத்துருக்களை தமிழ் வார்த்தைகளாக மாற்றிவிடும். உதாரணமாக ‘அம்மா’ என்று தட்டச்சு செய்ய வேண்டுமானால் ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அது தானாகவே தமிழில் அம்மா என்று மாற்றிவிடும்.
வாக்கிய தொடர்களை எழுதும்போது இடையில் ஆங்கில வார்த்தைகள் வேண்டுமானால் control + G பட்டன்களை அழுத்தியபின் தட்டச்சு செய்தால் அங்கில வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருக்கும். மீண்டும் தமிழில் தட்டச்சு செய்ய control + G பட்டன்களை அழுத்தினால் அதன் பிறகு தட்டச்சு செய்யும் வார்த்தைகள் தமிழில் வெளிப்படும்.
தேவையான செய்திகளை தட்டச்சு செய்து முடித்தவுடன் அவற்றை வழமையான முறையில் copy செய்து தேவையான இடத்தில paste செய்து கொள்ளலாம்.